மதுரையில் அமைந்துள்ள அண்ணாமலையார் பள்ளியில் படிக்கும், கல்வி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளுக்கு நமது நிழல் அறக்கட்டளையின் மூலமாக மூன்று குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களின் ஒரு ஆண்டிற்க்கான பள்ளி கல்விக் கட்டணமான 65 ஆயிரம் ரூபாயை நமது நிழல் அறக்கட்டளையின் மூலமாக செலுத்தவுள்ளோம். அதன் முதற்கட்டமாக ரூபாய் 30 ஆயிரம் இன்று செலுத்தியுள்ளோம் அடுத்துவரும் மாதங்களில் மீதமுள்ள கல்வித்தொகையை நாம் செலுத்தவுள்ளோம்.
நமது அறக்கட்டளையின் மூலமாக இந்த குழந்தைகள் நன்றாக படித்து, இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று நிழல் அறக்கட்டளை மூலமாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அக்குழந்தை குழந்தைகளை வாழ்த்துவோம்…